ஸ்ரீவில்லிபுத்தூர் புனித தோமா ஆலயத்தில் ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.... இயேசுநாதர் வேடம் அணிந்த சிறுமி கழுதையில் ஊர்வலம் வந்தார்....*
ஸ்ரீவில்லிபுத்தூர் புனித தோமா ஆலயத்தில் ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.... இயேசுநாதர் வேடம் அணிந்த சிறுமி கழுதையில் ஊர்வலம் வந்தார்....*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புனித தோமா ஆலயத்தில் ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.... இயேசுநாதர் வேடம் அணிந்த சிறுமி கழுதையில் ஊர்வலம் வந்தார்.... இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்த இறந்த நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதல் நாளாகவும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வருகிற 09ம் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் இருந்த நாட்களை தவக்காலமாகவும் அந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித தோமா ஆலயத்தில் பேராயர் தினகரன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தவக்காலத்தில் இருந்த இயேசுநாதர் எளியவர் வலியவர் என இருக்கும் அனைவரும் சமம் என்பதை உலக மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக கழுதையில் ஊர்வலமாக வந்தார் அதை நினைவு கூறும் வகையில் புனித திரு தோமா ஆலயத்தைச் சேர்ந்த சிறுமி ரியா பிரியதர்ஷினி கழுதை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்தார் அவரைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தென்னை ஓலையான குருத்தோலையை கையிலேந்தி பள்ளியின் முன்பிலிருந்து ஓசானா என்னும் பாடலை பாடலை பாடியபடி காமராஜர் சாலை பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு வழியாக வலம் வந்து புனிதா தோமா ஆலயத்திற்கு வந்தடைந்தனர். அதன்பின்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டு குருத்தோலை ஞாயிறை கொண்டாடினர்.