கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக பயனாளி களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக பயனாளி களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-04-13 08:05 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்காக பயனாளி களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 127 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை களை வழங்கிய பின்னர் பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு இல்லாத ஏழைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் புதிதாக வீடு கட்டுவதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வீடு கட்டிக் கொடுக்கிறார் என்றார். மேலும் வீடு கட்டும் ஆணைகளை வாங்கிய பயனாளிகள் அனைவரும் விரைவில் வீடுகளை கட்டி முடித்து புதுமனை புகு விழாவிற்கு என்னையும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரையும் அழையுங்கள் என அன்பான வேண்டுகோள் விடுத்தார. மேலும் அவ்வாறு நீங்கள் அழைக்கும் போது நாங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்து உங்களை கௌரவப் படுத்துவோம் எனவும் வெறுங்கை யோடு வராமல் மொய் செய்வோம் என கலகலப்பாக பேசினார். மேலும் தமிழகத்தில் விடுபட்டு போன மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனவும் அப்போது தகுதியான அனைவரிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

Similar News