பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் இன்று மாலை புதிய பேருந்து நிலையத்தில் புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் முஹம்மது முனீர் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.