ஓசூர்:சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கடை உரிமையாளர் கைது.
ஓசூர்சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கடை உரிமையாளர் கைது.;
சாக்லேட் வாங்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த கடைக்காரர் போக்சோவில் போலீசார் கைது செய்தனர். ஒசூர் மாநகராட்சியில் உள்ள ஒரு கடையில் நேற்று சாக்லேட் வாங்க வந்த 8 வயது சிறுமிக்கு கடைக்காரர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மளிகை கடை உரிமையாளர் சிவசங்கர் (56) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.