சாலையில் உலா வரும் ஒற்றைக்காட்டு யானை

வரட்சியால் மலை மாவட்டத்திற்கு படையெடுக்கும் காட்டு யானை...;

Update: 2025-04-14 14:42 GMT
வரட்சியால் மலை மாவட்டத்திற்கு படையெடுக்கும் காட்டு யானை... சமீப தினங்களில் சமவெளி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் அதிகமான வறட்சி நிலவுவதால் பல்வேறு உயிரினங்களும் தண்ணீர் தேடி இடம்பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. முதுமலை வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் பற்றாக்குறையின் காரணமாக மலைப்பகுதிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒற்றை காட்டு யானை ஒன்று சோலூர் எஸ்டேட் பகுதியில் உலா வருகிறது. கூடலூர் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள சோலூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை இருந்ததை அவ்வழியாக சென்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மணிகண்டன் கைபேசியில் பதிவு செய்துள்ளார். தேயிலை தோட்டத்தில் கீழ் பகுதியில் இருந்து யானை வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி பார்க்கும் பொழுது ஆக்ரோஷமாக வாகனத்தை விரட்ட முயற்சித்து ஓடிவந்தது. இதனை கண்ட அச்சம் அடைந்த மணிகண்டன் அங்கிருந்து உடனடியாக கிளம்பி சென்றனர். அவருடைய கைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ பதிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களிலும் நடந்து செல்பவர்களும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் போதுமான நீர் பற்றாக்குறையின் காரணமாக பல்வேறு வன உயிரினங்களும் மலை பாங்கான இடங்களுக்கு தஞ்சம் அடைவதால் மலை மாவட்ட மக்களும் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் எனவும் சூலூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புகைப்படம் எடுப்பதற்காக வாகனங்களில் நிறுத்தி ரசிப்பதால் அவ்வையாக செல்லும் சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காட்டு யானை உலாவுவதால் உள்ளூர் மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Similar News