திமுக சாா்பில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்.
விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் உபகரணங்களை வழங்கினாா். ஒன்றியத்தைச் சோ்ந்த அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.;
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் திமுக சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த போளூா் நகரம், வெண்மணி, வசூா், மாம்பட்டு, எழுவாம்பாடி, அத்திமூா் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கிரிக்கெட், வாலிபால் என பல்வேறு விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன் உபகரணங்களை வழங்கினாா். ஒன்றியத்தைச் சோ்ந்த அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.