ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் வருவாய்துறையினரால் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு.... காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்....

ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் வருவாய்துறையினரால் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு.... காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.....*;

Update: 2025-04-15 02:35 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் வருவாய்துறையினரால் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு.... காய்கறி மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் (பென்னிங்டன்) தனியார் காய்கறி மார்க்கெட்டின் முகப்பில் வைக்கப்பட்ட போர்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது தனியார் காய்கறி விற்பனை வளாகம். பழமை வாய்ந்த இக்கட்டிட வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மற்றும் மலர் விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் இந்த வளாகத்தில் உள்ள கடைகளில் வந்தே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய்த்துறை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து தனியார் காய்கறி வளாகத்தில் கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து இன்று கட்டிடம் சேதம் அடைந்து இருப்பதாகவும் பொதுமக்கள் இங்கு வந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறி இனிவரும் காலங்களில் பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தி பிளக்ஸ் போர்டு ஒன்றை வணிக வளாகத்தின் முகப்பில் வருவாய்த் துறை சார்பில் வைக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்தின் தன்மை குறித்து எவ்வித முன்னறிவிப்பு இன்றி பொதுமக்கள் யாரும் இங்கு வர வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையின் மூலமாக குழப்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே காய்கறி வளாகம் அமைந்துள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது இரவு நேரம் என்றாலும் பரபரப்பாக இருக்கும் பேருந்து நிலைய சாலை பகுதியில் திடீரென நடைபெற்ற மறியலால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் அரசு தொடர்ந்து வணிகர்களை வஞ்சித்து வருவதாகவும் அரசுக்கு வருவாய் ஈட்டும் செயலில் ஈடுபடுவதாகவும் அரசுக்கு வருவாய் இட்டுவதால் அதனால் பிரதிபலம் அடைவதாகவும் வணிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News