கோவை: பொன்முடி மீது விஸ்வ இந்து பரிசத் புகார் !

அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கோவை மாவட்ட விஸ்வ இந்து பரிசத் புகார் அளித்துள்ளது.;

Update: 2025-04-15 04:08 GMT
கோவை: பொன்முடி மீது விஸ்வ இந்து பரிசத் புகார் !
  • whatsapp icon
அமைச்சர் பொன்முடி இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக விஸ்வ இந்து பரிசத் புகார் அளித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட கழக கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்து மதத்தையும், சைவ மற்றும் வைணவத்தையும் இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடியின் பேச்சு, இந்து மத நம்பிக்கைகள் மற்றும் மத உணர்வுகளை அவதூறாக சித்தரிப்பதாகவும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் விஸ்வ இந்து பரிசத் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, விஸ்வ இந்து பரிசத் தென் தமிழகம் மற்றும் கோவை மாவட்ட தர்ம யாத்திரா பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமையில், நேற்று கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், அமைச்சர் பொன்முடி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 196, 299 மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் வெறுப்பு பேச்சு தொடர்பான வழிகாட்டுதலின் படி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாக விஸ்வ இந்து பரிசத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News