கோவை: திருமண ஜோடியிடம் ரகளை-இன்ஸ்பெக்டர் மாற்றம் !

கோவை விமான நிலையத்தில் ரகலையில் ஈடுபட்ட திருமண ஜோடி வழக்கில், பெண் இன்ஸ்பெக்டர் மாப்பிள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக கோவை, காவல் கட்டுப்பாட்டு வரைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.;

Update: 2025-04-15 04:18 GMT
கோவை: திருமண ஜோடியிடம் ரகளை-இன்ஸ்பெக்டர் மாற்றம் !
  • whatsapp icon
கோவை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் தேனிலவு முடித்து திரும்பிய புது மாப்பிள்ளையிடம் இளம் பெண் ஒருவர் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றியதாக தகராறு செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே அந்த புது மாப்பிள்ளை மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும், அந்த புகார் தொடர்பாக புது மாப்பிள்ளைக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அதற்காக பணம் பெற்றதாக கூறப்பட்ட நிலையில் நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Similar News