கோவை: கமல்ஹாசன் எம்.பி. ஆகிறார் - மக்கள் நீதி மையம் தகவல் !

மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.;

Update: 2025-04-15 04:40 GMT
கோவை: கமல்ஹாசன் எம்.பி. ஆகிறார் - மக்கள் நீதி மையம் தகவல் !
  • whatsapp icon
மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி.) பதவியேற்க உள்ளதாக அக்கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். கோவை வடகோவையில் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று மத்திய உணவு கிடங்கில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் நீதி மையம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கவேலு, அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பைப் போற்றிப் புகழ்ந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக புரட்சி விதைகளை விதைத்தவர் அவர் என்றும், அவரை வணங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தங்கவேலு, ராஜ்ய சபா உறுப்பினர் பதவி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போது வரை தலைவர் (கமல்ஹாசன்) தான் அந்த பதவியில் தொடர்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. வேறு யாரும் தற்போது பரிசீலனையில் இல்லை. நாங்கள் அனைவரும் தலைவர் மட்டுமே அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். அவர் தற்போது படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். வந்த பிறகு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar News