கோவை: மகளைத் திட்டிய நண்பனை கொலை செய்த தந்தை !
மகளைத் திட்டிய நண்பனை, கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.;

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி காந்தி நகர் பகுதியில் நேற்று இரவு நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், என்பவர் தனது நண்பரான சிக்கந்தர் என்பவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இருவரும் மது அருந்திய நிலையில், மணிகண்டனின் மகளை சிக்கந்தர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆறுமுகத்தை சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், ஆறுமுகத்தின் உடலை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று, பல்லடம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வீசிவிட்டு, தனது குழந்தைகளுடன் மணிகண்டன் இரவு காட்சி திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த சூலூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மணிகண்டனை கைது செய்துள்ள காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.