செயல்படாத குவாரி குட்டையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு...கொலை செய்து வீசப்பட்டாரா என விசாரணை...

செயல்படாத குவாரி குட்டையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு...கொலை செய்து வீசப்பட்டாரா என விசாரணை...;

Update: 2025-04-16 15:10 GMT
சிவகாசி அருகே செயல்படாத குவாரி குட்டையிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு...கொலை செய்து வீசப்பட்டாரா என விசாரணை... சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் செங்கமலப்பட்டி சாலையில் தனியார் கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மிதந்துள்ளது. இதையறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் குவாரி குட்டையில் மிதந்த இளைஞரின் சடலத்தை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (வயது 25) என்பதும் இவர் சக நண்பர்களுடன் நேற்று மாலை கல் குவாரி பகுதியில் வைத்து மது அருந்தியதும் தெரிய வந்தது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் உயிரிழந்தாரா? அல்லது சக நண்பர்கள் கொலை செய்து குட்டையில் வீசினார்களா? என்ற கோணத்தில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News