தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம்

தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை;

Update: 2025-04-17 09:31 GMT
தமிழக வெற்றிக் கழகம் கரூர் கிழக்கு மாவட்டம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269 வது பிறந்த நாளை முன்னிட்டு தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நகர நிர்வாகி விஜய்குமார் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் தோகைமலை ஒன்றிய நிர்வாகி சந்தோஷ் குமார், குளித்தலை ஒன்றிய நிர்வாகி நிரேஷ் குமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகி முத்துக்குமார், கடவூர் ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுதாகர், ரம்யா மற்றும் கரூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர கழகம், ஒன்றிய கழகம், பேரூர் கழகம் கிளை கழகம் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணியினர், பூத் செயலாளர்கள், கழக உறுப்பினர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Similar News