அரசு மருத்துவமனையில் நடந்த விதி மீறல்களையும் பண வசூலையும் தட்டி கேட்டதன் காரணமாகவே தன்னை தாக்கியதாக புகார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த விதி மீறல்களையும் பண வசூலையும் தட்டி கேட்டதன் காரணமாகவே தன்னை தூய்மை பணியாளர்களை வைத்து மெடிக்கல் ஆபிஸர் தாக்கியதாக தாக்கப்பட்ட லேப் டெக்னீசியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ...*;

Update: 2025-04-17 15:28 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த விதி மீறல்களையும் பண வசூலையும் தட்டி கேட்டதன் காரணமாகவே தன்னை தூய்மை பணியாளர்களை வைத்து மெடிக்கல் ஆபிஸர் தாக்கியதாக தாக்கப்பட்ட லேப் டெக்னீசியன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ... விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த ஒன்பதாம் தேதி ராஜபாளையத்தைச் சார்ந்த ராஜி என்பவர் நுண் கதிர்வீச்சாளர் பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது அவர் பணியில் சேர்ந்த பொழுது எக்ஸ்ரே ரூமில் எந்த வித கல்வித் தகுதியும் இல்லாத பத்தாம் வகுப்பு படித்த பிரியா என்பவர் எக்ஸ்ரே எடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாகவும், அதை பார்த்த அவர் அதிர்ச்சியில் பிரியாவிடம் இது குறித்து கேட்டதற்கு மெடிக்கல் ஆபீசர் இளங்கோ தான் தன்னை எக்ஸ்ரே எடுக்க அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார் இதை அறிந்த நுண்கதிர்வீச்சாளர் ராஜு இது குறித்து மெடிக்கல் ஆபீஸர் இளங்கோவிடம் எந்தவித கல்வித் தகுதியும் இல்லாத நபரை புறநோயாளிகளுக்கும் உள்நோயாளிகளுக்கும் எக்ஸ்ரே எடுக்கச் சொல்வது சட்டப்படி குற்றம் என ராஜீ மெடிக்கல் ஆபீஸரிடம் கூறியதாகவும் இதன் காரணமாக கடந்த ஒன்பதாம் தேதி மெடிக்கல் ஆபீஸர் இளங்கோ மற்றும் அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் ராஜுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் அழகர் மற்றும் முருகன் ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்கள் எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டாய பண வசூல் செய்ததாகவும் இதையும் நுன்கதிர்வீச்சாளர் ராஜு கண்டித்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிகழ்வுகள் அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உமா மகேஸ்வரி என்ற தூய்மை பணியாளரை எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் அனுப்பி தன்னிடம் பிரச்சனை செய்ததாகவும் மேலும் உமா மகேஸ்வரி தன்னை தகாத வார்த்தையில் பேசி சண்டைக்கு இழுத்ததாகவும் மேலும் உமா மகேஸ்வரி காலணி அணிந்து கொண்டு எக்ஸ்ரே ரூமூக்குள் வரக்கூடாது என்று கூறியதாகவும், ஆகையால் தான் உமா மகேஸ்வரி தன்னை தாக்கியதாக பொய்யான தகவலை கூறி சக பணியாளர்களை வைத்து தன்னை தாக்கி அங்கிருந்து வெளியே அனுப்பியதாகவும் இதுகுறித்து மெடிக்கல் ஆபிஸர் இளங்கோவிடம் கூறியதற்கு அவர் தன் மீதுதான் தவறு என தன்னை பணியிட மாற்றம் செய்து விட்டதாகவும் தான் மீது எந்த தவறும் இல்லை எனவும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடக்கும் பண வசூல் மற்றும் விதிமீறல்களை கண்டித்ததன் காரணமாகவே தன்னை மருத்துவமனையில் பணிபுரியும் மெடிக்கல் ஆபீஸர் இளங்கோ மற்றும் தூய்மை பணியாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தன்னை தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜி என்ற நுண்கதீர் வீச்சாளர் மனு அளித்தார் பேட்டி: ராஜு

Similar News