பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி கடையில் இருந்த பணத்தை திருடி சென்ற இளைஞர்; கழுத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி*

பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி கடையில் இருந்த பணத்தை திருடி சென்ற இளைஞர்; கழுத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி*;

Update: 2025-04-17 15:36 GMT
அருப்புக்கோட்டை அருகே டீக்கடையில் இருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கி கடையில் இருந்த பணத்தை திருடி சென்ற இளைஞர்; கழுத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெரிய கட்டங்குடி கிராமத்தை வேல்மணி என்பவர் மனைவி சாந்தி(53).‌ இவர் பந்தல்குடி செல்லும் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் பிரபல தனியார் உணவகம் அருகே கல்லூரி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பிற்பகல் வேளையில் சாந்தி டீக்கடையில் இருந்த போது டீக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் டீக்கடைக்கு டீ குடிப்பது போல் வந்துள்ளார். டீயை குடித்துவிட்டு சென்ற அந்த இளைஞர் மீண்டும் அதே டீ கடைக்கு வந்து சர்பத் போட கூறியுள்ளார். சாந்தியும் சர்பத் போட உள்ளே சென்றபோது திடீரென கடைக்குள் நுழைந்த இளைஞர் சாந்தியின் கழுத்தில் கத்தியை வைத்து வாயை பொத்தி தாக்கியுள்ளார். மேலும் கடையில் இருந்த பணத்தை தருமாறு மிரட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாந்தியின் கழுத்தில் ஓரம் வெட்டுக்காயம் விழுந்தது. அந்த இளைஞர் சாந்தியை கீழே தள்ளிப்பட்டு கடையில் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிக் கொண்டு அந்த இளைஞர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். வழக்கமாக கடைக்கு வரும் இளைஞர் தான் இந்த செயலை செய்த சாந்தி தெரிவித்துள்ளார். கழுத்தில் காயமடைந்த சாந்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடு இளைஞரை தேடி வருகின்றனர். அந்தக் கடையில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தினால் அருகில் எங்காவது சிசிடிவி கேமராக்கள் உள்ளதா என போலீசார் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News