திமுகவை விமர்சித்து அர்ஜுன் சம்பத் பேட்டி

தி.மு.க தங்கள் மீதான ஊழல், லஞ்சம் மற்றும் சாராயம் மரணங்களை திசை திருப்புவதற்காக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. வக்ஃப் சட்டத்தை உள்நோக்கத்தோடு விசிகவும், திமுகவும் எதிர்க்கிறது. தமிழகத்திலே மத பதற்றத்தை உருவாக்க திமுக அரசே முயல்கிறது:- திருக்கடையூரில் அர்ஜுன் சம்பத்;

Update: 2025-04-17 16:06 GMT
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்-தின் 60-வது வயதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு உலகத்தில் பல்வேறு நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கென எந்த நாடும் இல்லை. மேற்கு வங்கத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதும், வீடுகள் தீவைத்து எரிக்கப்படுவதும் சொந்த நாட்டிலேயே இந்துக்கள் அகதிகளாக வெளியேறுவதும் வேதனையை அளிக்கிறது. உலகத்தில் இந்துக்கள் எங்கு தாக்கப்பட்டாலும் இங்கேதான் ஓடிவர வேண்டும். ஆனால் இங்கேயே இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்து சமுதாயத்திற்காக பணியாற்றுபவர்கள்மீது தொடர்ந்து பல்வேறு பொய் வழக்குகள் போடப்படுகிறது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மதமாற்றம் செய்ய பைபிள் வழங்கியதை ஜனநாயக முறையில் தடுத்து நிறுத்திய குருமூர்த்தி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால் சைவத்தையும் வைணவத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய பொன்முடிமீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியது போதாது. அவர்மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் அவரது மன்னிப்பு எங்களுக்கு தேவையில்லை. தமிழகத்திலே நல்ல சூழ்நிலை உருவாகி இருக்கிறது. 2026-ஆம் ஆண்டில் மத்தியிலே மோடி, தமிழகத்தில் எடப்பாடி என அமித்ஷா அறிவித்துள்ளார்;. தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்கிற ஓர் மகத்தான மாற்றம் வரும் இந்த மகத்தான மாற்றம் உருவாக வேண்டும் என நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம். மத்தியிலே சுயாட்சி, மாநிலத்தில் கூட்டாட்சி என்பது அம்பேத்கர் வலியுறுத்தினார் அதுவே எங்களது கொள்கை. நிர்வாக காரணங்களுக்காக மாநில அரசுகள் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு என்பது மாநிலம் தானே தவிர தனி நாடு அல்ல. வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்பதே அம்பேத்கரின் கொள்கையாக இருந்தது. இவர்கள் இந்தியாவையே பாரதம் என ஏற்றுக்கொள்ளாமல் ஒன்றியம் என சொல்கிறார்கள். இது அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. இவர்களுடைய லஞ்சம், ஊழல் மற்றும் சாராய மரணங்களை மறைப்பதற்காக மக்களை திசை திருப்புவதற்காக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்கள். மேற்கு வங்கத்திலே வக்ஃப் சட்டத்தை காரணமாக கொண்டு தான் இந்துக்களை தாக்குகிறார்கள். தமிழகத்தில் கூட ஓரிடத்தில் இத்தனை ஆண்டுகள் வசித்த இடம் வக்ஃப்க்கு சொந்தமானது என நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வக்ஃப் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆனால் விசிகவும், திமுகவும் அதனை உள்நோக்கத்தோடு தமிழகத்திலே ஒரு மத பதட்டத்தை உருவாக்கும் நோக்கில் போராட்டங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா செய்வதுபோல் இங்கே திமுக அரசை போராட்டங்களை தூண்டி விடுகிறது. வக்ஃப்க்கு எதிரான போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Similar News