வக்ஃபு சட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறையில் போராட்டம்
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஜூம்ஆ தொழுகைக்கு பின்னர் கண்டன முழக்கம்:- திடீர்மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்டோர் பங்கேற்று முழக்கம்:-;
வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள், தொழுகைக்குப் பின்னர் வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூருல்லா தலைமை வகித்தார். இதில், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி பேசினர். இதில், திடீர் மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் 200-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.