பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் பேராவூரணி நகர வர்த்தகர் கழக நிர்வாகிகள் தேர்தல்

வர்த்தகர் சங்க தேர்தல்;

Update: 2025-04-19 04:17 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர வர்த்தகர் சங்கம் பழம் பெருமைமிக்க வர்த்தக சங்கமாகும். பேராவூரணியில் 1000க்கும் மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் நிலையில், சங்கத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை உற்சாகத்துடன் தொடங்கியது. சங்கத்தின் உறுப்பினரும், கட்டுப்பாட்டு கமிட்டி தலைவருமான பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் காலை 8:20 மணிக்கு தனது வாக்கை முதலாவதாக பதிவு செய்தார். அதனை தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன், அன்பழகன் அப்துல்லா, வெங்கடேஷ், லட்சுமணன், நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தேர்தல் நடத்தும் குழு உறுப்பினர்கள் கௌதமன் பிரசாத் பொன் ராமமூர்த்தி ஏடிஎஸ் குமரேசன் உள்ளிட்ட தேர்தலை நடத்தி வருகின்றனர் இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். செயலாளராக அப்துல் ரகுமான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தலைவர் பதவிக்கு சாமியப்பன், சுப்பிரமணியன் என்ற இருவரும், பொருளாளர் பதவிக்கு பாரதி, மணிகண்டன் இருவரும் போட்டியிடுகின்றனர் தேர்தலை ஒட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக வியாபாரிகள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

Similar News