குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனைக் கூட்டம்
குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி திமுக அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.