நீட்தேர்வை ரத்து செய்யாதது ஏன் அதிமுக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஏமாற்றிய திமுக வை கண்டித்து மயிலாடுதுறையில் அஇஅதிமுக ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-19 18:59 GMT
.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் நீட் சேர்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ மாணவிகள் உயிர் நீத்ததாக குற்றம் சாட்டி உயிர்நீத்த  22 மாணவ மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தி  கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மௌன ஊர்வலமாக கிட்டப்பா அங்காடி வந்தடைந்தனர். அங்கே, உயிரிழந்த 22 மாணவ மாணவிகளின் உருவபட பேனர் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத திமுக அரசை கண்டிப்பதாக கண்டன உரையாற்றினார். முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, ராதாகிருஷ்ணன்,  சக்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News