பாஜக தலைவருக்கு மதுரை எம்.பி பதிலடி
மதுரை எம்.பி பாஜக தலைவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.;
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் பணி தபால்காரர் பணி என்று கருத்து தெரிவித்த நிலையில் “ஆளுநரை தபால்காரர் என்று கூறுவது முதல்வருக்கு அழகு அல்ல. என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்த நிலையில் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல” என்று சொல்லுங்களேன் திரு நயினார் நாகேந்திரன் அவர்களே ! என்று மதுரை எம்.பி வெங்கடேசன் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.