மண்வெட்டியால் கட்டிட தொழிலாளி வெட்டி கொலை
மதுரை வாடிப்பட்டி அருகே கட்டிட தொழிலாளி மண் வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.;
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்த பாலகுமாரின் மகன் சரவணபாண்டி ( 24) என்பவர் மொசைக் தரைக்கு பால் சீலிங் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி இந்திரா காலனி பகு தியில் உள்ள தனது நண்பர் முனியாண்டி என்பவர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று (ஏப்.20) காலை அதே பகுதியை சேர்ந்த வினோத், மருதுபாண்டி, பாலமுருகன், மணி ஆகிய 4 பேர் கொண்ட கும்பலால் மண் வெட்டியால் சரவண பாண்டியின் தலையில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரவண பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணபாண்டியை எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.