தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்*
தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்*;
அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தர்மா ரெக்ரேசன் கிளப் என்ற தனியார் மதுபான பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய போலீசார் பத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(31). இவர் தனது நண்பர் பந்தல்குடியை சேர்ந்த கோபி(27) என்பருடன் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தர்மா ரெக்ரேசன் கிளப் என்ற தனியார் பாரில் கடந்த இரு தினங்களுக்கு முன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் சப்ளையரிடம் சுண்டல் கேட்டபோது சுண்டல் தர மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பாரில் வேலை செய்த ஊழியர்கள் விக்னேஷையும் அவரது நண்பர் கோபியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விக்னேஷ் மற்றும் கோபி இருவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விக்னேஷின் நண்பர்கள் பாருக்கு வந்ததை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாரில் உள்ள சேர்கள் அடித்து உடைக்கப்பட்டது. பாரில் வேலை செய்த சப்ளையர்கள் சாலமன்ராஜா, பாஸ்கர் மற்றும் அமல்ராஜ் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மோதலை தடுத்து காயம் அடைந்தவர்களை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவம் குறித்து காயமடைந்த விக்னேஷ் உறவினர் ஜெனிபர் அளித்த புகார் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் தனியார் பாரில் வேலை செய்யும் பத்து நபர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல பாரில் வேலை செய்யும் சப்ளையர் திருக்குமரன் நகரை சேர்ந்த சாலமன் ராஜா(52) அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கோபி, தாமரை செல்வம் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.