தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரக்கிளையில், பணி நிறைவுபெறும் ஆசிரியர்கள் ரெ.மாணிக்கவாசகம், இரா.மகேஸ்வரி ஆகியோருக்கு பாராட்டுவிழா பேராவூரணி மினிபாலா விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத்தலைவர் கு.பாலச்சந்தர் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் சி.லெட்சுமணசாமி வரவேற்றார். விழாவில் மேனாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் க.நீலகண்டன், மேனாள் மாவட்ட துணைத் தலைவர் கு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரம்ஜான்பீவி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வி.ராமசாமி, ரா.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செ.இராகவன்துரை பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை, சந்தன மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் ச.செல்லத்துரை நன்றி கூறினார்.