தஞ்சையில் மே தின பேரணி- பொதுக்கூட்டம்! ஏஐடியுசி- சிஐடியு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ஆலோசனைக் கூட்டம்;
தஞ்சாவூர் கீழராஜவீதி ஏஐடியுசி சங்க மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு ஒன்றிய பாசிச மோடி அரசை கண்டித்து, மே.1ஆம் தேதி தொழிலாளர்களின் உரிமை தினமான 139 ஆவது மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், 01.05.2025 மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து, மே தினப் பேரணி புறப்பட்டு, பனகல் கட்டிடம் வந்தடைந்து மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது, ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். எனவே பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்ட பொருளாளர் பேர்நீதிஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் இ.டி.எஸ். மூர்த்தி, தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.