போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவைக் கூட்டம்
பேரவைக் கூட்டம்;
தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, விரைவு போக்குவரத்துக் கழக தஞ்சை கிளை பதினோராம் ஆண்டு பேரவைக் கூட்டம் கிளை தலைவர் கே.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. உதவி தலைவர் ஏ.சி.தூய மணி முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ். ஞானசேகரன் வரவேற்றார். மாநிலத் துணைத்தலைவர் எம்.சண்முகம் துவக்க உரையாற்றினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.சண்முகம், மாநில துணைத்தலைவர் ஆர்.சின்னசாமி, அனைத்து அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் டி. கோவிந்தராஜ், மண்டலச் செயலாளர் ஆர். இளங்கோவன், விரைவு போக்குவரத்து கழக நாகை கிளைத் தலைவர் ஜெ. சுகுமாறன், புதுச்சேரி கிளைச் செயலாளர் ஆர். தமிழ்வாணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுச் செயலாளர் கே.கர்சன் நிறைவுரையாற்றினார். புதுக்கோட்டை மண்டல தலைவர் பி.லோகநாதன், பொருளாளர் எம்.ராமதாஸ், அரசு போக்குவரத்துக் கழக தஞ்சை கிளை தலைவர் ஜி. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விரைவு போக்குவரத்து கழக தஞ்சை கிளை பொருளாளர் கே.பத்மநாதன் நன்றி கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய தலைவராக கே.மாரிமுத்து, செயலாளராக எஸ். ஞானசேகரன், துணைத் தலைவர்களாக ஏ.காம்ரேட் தூய மணி, என்.கருப்பையா, துணைச் செயலாளர்களாக டி.சங்கரன், கே சண்முகானந்த பவன் மற்றும் எம். பாலசுப்பிரமணியன், எஸ். பழனிதுரை, டி.ராஜசேகரன், கே.பாலு, பி.மதியழகன், ஆர்.மகாதேவன், அமராவதி அன்பழகன், சியாமளா தேவி வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நவம்பர் 2015 முதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், பெண்களுக்கான மருத்துவப் படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், பெண்களுக்கான மருத்துவப்படி, வழங்க வேண்டும். குடும்ப பென்சன்தாரர்களுக்கு பென்ஷன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசு பென்சன்தாரர்களுக்கு வழங்குவது போல் குடும்ப பாதுகாப்பு நிதி ரூபாய் 50,000 வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.