முருகப்பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
மேல்மாயில் மலை மேல் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கர்ப்பகிரகத்தில் உள்ள முருகப்பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் மலை மேல் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கர்ப்பகிரகத்தில் உள்ள முருகப்பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டன. இக்கோயிலுக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.