ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் நிறைவு பூஜை!
ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு நிறைவு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ரூஷா டவுன்ஷிப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு நிறைவு பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அறுசுவை விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் முனீஸ்வரருக்கு மொய் எழுதினார்கள்.