பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது-ரூ 68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தபின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேட்டி*;
தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடக்கின்ற இடங்களை விபத்தில்லா இடங்களாக மாற்ற,பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது-ரூ 68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தபின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பேட்டி விருதுநகர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச் 44-ல் 3 இடங்களில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.அதன்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,வடமலைக்குறிச்சி ரோடு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்து நடப்பதை கருத்தில் கொண்டு இவ்விடங்களில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதன்படி இவ்விடங்களில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை முன்னிட்டு பணிகள் தொடங்க இன்று பூமி பூஜை விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் முன்னிலையில் எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி மாணிக்கம் தாகூர்,விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் நடக்கின்ற இடங்களை விபத்தில்லா இடங்களாக மாற்ற,பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு ரூ.68 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்றும் இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிவுற்று விபத்தில்லா இடங்களாக மாறும் என்றார்.