சதுரங்க போட்டியில் வென்ற மேலூர் மாணவி

மதுரையில் நடந்த சதுரங்க போட்டியில் மேலூர் மாணவி மூன்றாவது இடத்தை பெற்றார்.;

Update: 2025-04-22 00:41 GMT
மாநில அளவிலான சதுரங்க போட்டி மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியின் உடற்கல்வித்துறை மற்றும் தர்ஷினி செஸ் அகாடமி சார்பில் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று (ஏப் .21)நடைபெற்றது. இப்போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். 8வயது பிரிவு, 11 வயது பிரிவு, 14 வயது பிரிவு, ஓபன் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இப்போட்டியில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் மதுரை, மேலூர் ஒன்றியம், அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி இ.இஸ்பா டுஜானா ஏழு சுற்றுகளில் விளையாடி 5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார். இப்போட்டியில் சர்வதேச ரேட்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 வீரர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை ஆசிரியர்கள் பலர் பாராட்டினார்கள்.

Similar News