கருங்கலாப்பள்ளி கட்டளை மேட்டு வாய்க்காலில் தூர்வாரும் பணி

கரையோரம் பனை கன்றுகள் மீது மண்ணை கொட்டும் அவலம், நாம் தமிழர் கோரிக்கை;

Update: 2025-04-22 03:15 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்கலாப்பள்ளி கட்டளை மேட்டு வாய்க்கால் கரையோரம் நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டு தற்போது சுமார் 3 அடி உயரம் வளர்ந்துள்ளது. தற்போது ஆற்றுப் பாதுகாப்பு பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்ததாரர் ஜேசிபி இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வாய்க்கால் கரையில் வளர்ந்த பனை கன்றுகள் மீது மண்ணை கொட்டி மூடியுள்ளனர். தூர் வாரும் முன்னர் வாய்க்கால் கரையில் உள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டு அதற்கு தகுந்தவாறு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இதுகுறித்து ஆற்றுப் பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீதமுள்ள மரக்கன்றுகளை ஆவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்

Similar News