வாசுதேவநல்லூர் மாரியம்மன் திருக்கோவிலில் வீதி உலா

மாரியம்மன் திருக்கோவிலில் வீதி உலா நடைபெற்றது;

Update: 2025-04-22 09:58 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் வளாகத்திற்குள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சித்திரை திருவிழா 2-ஆம் நாளை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயில் வளாகத்திற்குள் அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து பல்லாக்கில் நான்கு ரத வீதி உலா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. வீதி உலா முன்னேற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News