போடி பகுதியில் பெண்ணை ஆபாசமாக பேசியவர் கைது

கைது;

Update: 2025-04-22 13:34 GMT
போடி அருகே ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே நின்று இருந்த போது அங்கு வந்த பெருமாள் என்பவர் மகேஸ்வரியை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மகேஸ்வரி எச்சரித்த நிலையிலும் பொது இடம் என்று கருதாமல் மேலும் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் பெருமாளை நேற்று (ஏப்.21) கைது செய்தனர்.

Similar News