சக்திவேல் முருகப்பெருமான் கோயிலில் சிறப்பு பூஜை!

மயிலாடும் மலை சக்திவேல் முருகப்பெருமான் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-04-22 14:38 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட மேல் மயில் கிராமத்தில், மயிலாடும் மலை சக்திவேல் முருகப்பெருமான் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்ரல் 22) செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News