தமிழக - கேரளா எல்லையான குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பேருந்து தடுப்புச் சுவரின் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

விபத்து;

Update: 2025-04-23 10:07 GMT
தேனி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது குமுளி மலைசாலை. தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்வதற்கு மூன்று வழித்தடங்கள் உள்ளது, போடி மெட்டு, கம்பமெட்டு, குமுளி மலைச்சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் குமுளி மலைச்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு சென்று விட்டு மீண்டும் குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு குமுளி மழைச்சாலையில் கீழே இறங்கி வந்து கொண்டு வந்துள்ளது. இந்தப் பேருந்தை பாண்டி சுந்தரம் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பேருந்தில் 20 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குமுளி மலைச்சாலையில் மாதா கோவில் அருகே பேருந்து கீழே வந்து கொண்டிருந்தபோது பேருந்தை வளைவில் திருப்பி உள்ளார். இதில் திடீரென வாகனம் ப்ரேக் பிடிக்காமல் நிற்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பேருந்து நின்றது. அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. எனினும் அப்பகுதியில் பேருந்து சாலை மறித்து சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு குமுளி காவல்துறையினர் சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதுவரை கம்பத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பமெட்டு மலைச்சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு செல்லுமாறு போக்குவரத்து மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பேருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைச்சாலையில் பேருந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேர பரபரப்பு காணப்படுகிறது.

Similar News