பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் பொன்முடியை கண்டித்து தேனி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
சைவம் வைணவம் சமயங்களை தொடர்புப்படுத்தி பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர் அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் தேனி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து எதிராக கண்டனங்களை தெரிவித்தும் பதவி விலகு! பதவி விலகு! பொன்முடி பதவி விலகு! கைது செய்! கைது செய்! பொன்முடியை கைது செய் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அமைச்சர் பொன்முடியின் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடுத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்