தமிழக நிருபர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்
தமிழக நிருபர்கள் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்;
தமிழக நிருபர்கள் சங்கத்தின் (TNS) மாநில பொதுக்குழு கூட்டம் மாநில நிறுவனத் தலைவர் கு.இராசசேகரன். அவர்கள், தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் ஜி.சிவக்குமார், அவர்கள், முன்னிலையிலும், சங்க தலைமை அலுவலகத்தில் காலை 11.15 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள் என சும்மா 40 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், இது நாள் வரை சிறப்பாக பணியாற்றிய நிறுவன தலைவர், பொதுச்செயலாளர், உள்ளிட்ட நிர்வாக குழுவினருக்கு பாராட்டுகளும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக... அசோக் குமார், சண்முகசுந்தரம், குமார், செந்தில் குமார், முத்துவேல் கிருஷ்ணன், ரமேஷ், ஷேக் தாவூத், ராதா, ஜினீத் குமார், ராஜா, உள்ளிட்ட 12 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களால், கு.இராசசேகரன். அவர்கள், தலைவராகவும் ஜி.சிவக்குமார், அவர்கள், மாநில பொதுச் செயலாளராகவும், எம்.ஆர்.ஆனந்தவேல் அவர்கள் பொருளாளராகவும், எஸ்.எம்.ராஜா அவர்கள் துணைத் தலைவராகவும், ப.பாண்டியன் மற்றும் ஜே.அசோக் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும், ஆ.ஜீவானந்தம் அவர்கள், அமைப்புச் செயலாளராகவும், இராமா.நரசிம்ம குமார் அவர்கள், மாநில செய்தி தொடர்பாளராகவும், தேர்தல் இன்றி, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழுவினருக்கு, பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. நான்காம் ஆண்டு துவக்க விழாவை ஒகேனக்கல்லில் நடத்துவது... ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது... ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவில் சங்கம் சார்பில் சிறப்பு மலர் வெளியிடுவது... சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தீவிர கவனம் செலுத்துவது... சங்க உறுப்பினர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தர இன்னும் கூடுதல் முயற்சியுடன் அரசை அணுகுவது. மாவட்டச் செய்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும், தாலுக்கா செய்தியாளர்களுக்கும் கிடைக்கும் வகையில், பிற சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பது... நமது சங்க உறுப்பினர்களுக்கு, சேலத்தில் உள்ள பிரபல மருத்துவமனைகளை அணுகி, இலவச முழு உடல் பரிசோதனை செய்ய ஏற்பாடுகளை செய்வது... உள்ளிட்ட 15 தீர்மானங்கள் முன்மொழியப் பட்டு, அத்தீர்மானங்கள், ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.