பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது;
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் விருதுநகர் தலைவர்மணி ராஜன் மற்றும் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெயா தலைமையில் பஹல்காம் பகுதியில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 27 நபர்கள் உயிரிழந்தனர் இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடந்த இடத்தை இந்திய உள்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதலை பற்றியும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தீவிரவாத தடுப்பு முயற்சிகள் குறித்து விளக்கமாக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபாலன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அதன்பின் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மோட்ச விளக்கு ஏற்றி அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கரேஸ்வரி ஈஸ்வரன், மாநில பட்டியல அணி செயற்குழு உறுப்பினர் குருசாமி, சிந்தனையாள பிரிவு மாவட்டத் தலைவர் வி பி என் செந்தில்குமார் மற்றும் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு நகரப் பிரதிநிதி பிரபு அவர்கள் செய்திருந்தார்கள்.