குடும்பத்தகராறு வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை 

தற்கொலை;

Update: 2025-04-23 16:47 GMT
தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியில், தனியார் அரிசி ஆலையில் தங்கி வேலை பார்த்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம், பூர்ணிமா மாவட்டத்தைச் சேர்ந்த பதியல் ரிஷி என்பவரின் மகன் ராஜ்குமார் ரிஷி (25). திருமணமானவர். இவர் திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியோடு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக ராஜ்குமார் ரிஷி, அரிசி ஆலை அருகில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர் ரஞ்சுத்குமார் வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமார் ரிஷி உடலை மீட்டு, உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Similar News