மகளைக் காணவில்லை என முதியவர் காவல்நிலையத்தில் புகார் 

காணவில்லை;

Update: 2025-04-23 16:50 GMT
தஞ்சாவூர் அருகே தனது மகளைக் காணவில்லை என முதியவர் வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், வேங்கராயன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (65). இவரது மகள் ஜோதிமணி (25). இவரது கணவர் மோகன்ராஜ் இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்து விட்டு சென்ற ஜோதிமணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சாம்பசிவம் மற்றும் குடும்பத்தினர் ஜோதிமணியை பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து வல்லம் காவல்நிலையத்தில் சாம்பசிவம் புகார் தெரிவித்தார். அதில் தஞ்சாவூர் அருகே 12-ம் பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மகன் ராமமூர்த்தி (27) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் வல்லம் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News