மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை அடாவடியாக கைது செய்த காவல்துறையினரைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-23 16:54 GMT
உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களையும், மாநிலம் முழுவதும் போராட்டத்துக்கு தயாரான நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளையும் அடாவடியாக கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்தும், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க  திங்கள்கிழமை இரவு புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை தஞ்சையில் ரயில் நிலையத்தில் வைத்து, கைது செய்த காவல் துறையைக் கண்டித்தும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்டத் தலைவர்  கஸ்தூரியை முன்கூட்டியே வீட்டுச் சிறை வைத்த காவல்துறையைக் கண்டித்தும், செவ்வாய்க்கிழமையன்று மாலை 6 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில், வர்க்க, வெகுஜன அமைப்புகளின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.சரவணன், ஆர்.கலைச்செல்வி, கே.அபிமன்னன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாணவர் சங்க மாநில பொதுச் செயலாளர் அரவிந்த், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.வசந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மாவட்டக்குழு உறுப்பினர் அருணா, மாநகரக்குழு உறுப்பினர் கரிகாலன் உள்ளிட்ட பல்வேறு அரங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News