ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து இயக்கக்கோரி கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்:

ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்து இயக்கக்கோரி கிராம பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-24 09:50 GMT
அரியலூர், ஏப்.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது உட்கோட்டை வழிதடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு தற்போது  நிறுத்தப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் பேருந்தைகளை மீண்டும் இயக்க வேண்டும், மாளிகை மேட்டில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், ஊர் பொதுமக்கள் உன்கிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News