இளைஞரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற மூவர் கைது

கைது;

Update: 2025-04-24 14:07 GMT
தஞ்சாவூரில் இளைஞரிடமிருந்து செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.300 ஐ பறித்துச் சென்ற மூன்று பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே குருவாடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த பிச்சைவேல் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகர் டாஸ்மாக் அருகில் தனது பைக்கில் நிறுத்தி விட்டுச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பைக்கை எடுக்கும்போது கார்த்திக்கை மூன்று பேர்  வழிமறித்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.300 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். இதன்பேரில், உதவி ஆய்வாளர் சத்தியநாதன் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  கார்த்திகேயனிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது, தஞ்சாவூர் சேப்பனாவாரி அப்துல் காதர் என்பவரின் மகன் முகமது ஆசிக் (21), அப்துல் சர்கார் மகன் முகமது யாஷிக் (24), முத்தப்பா மகன் சாகுல் ஹமீது (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் தெற்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News