போப் ஆண்டவருக்கு, ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் மௌன அஞ்சலி

போப் ஆண்டவருக்கு, ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2025-04-24 15:33 GMT
அரியலூர், ஏப்.25- கர்த்தருக்கும், திருச்சபைக்கும் சேவை செய்து வந்த போப்ஆண்டவரின் உயிர் கடந்த 21 ஆம் தேதி பிரிந்தது. உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள மிக சிறப்பு வாய்ந்த புனித பாத்திமா அன்னை கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று போப்ஆண்டவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அண்ணா சிலைக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஜான்கென்னடி தலைமையில் முன்னதாக பங்கு பேரவை தலைவர் வியாகுளம் முன்னிலையில். சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் இருந்து துவங்கிய மௌன அஞ்சலி ஊர்வலத்தில், பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌனமாக அமைதி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் 4 ரோடு, தா.பழூர் ரோடு, உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து பின்னர் புனித பாத்திமா அன்னை ஆலயத்திற்கு வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த போப்பாண்டவர் படத்திற்கு மலர்தூவி மக்கள் அனைவரும் மெழுகுவர்த்தியை வைத்து புகழஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், போப் ஆண்டவருக்காக, சிறப்பு திருப்பலி நடைபெற்றது

Similar News