காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
திண்டுக்கல் நாகல் நகர் அருகே காங்கிரஸார் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்;
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திண்டுக்கல் நாகல் நகர் தண்ணீர் தொட்டி அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் துறை மணிகண்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரியும் தரையில் படுத்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கைராஜ மற்றும் காளிராஜ் நிக்கோலஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்