உத்தமபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்
வழக்கு பதிவு;
உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் நேற்று (ஏப்.24) அவரது இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஜாகிர் உசேன் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் தனுஷ்கோடி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.