தேனி, வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கியது. சித்திரை வெள்ளிக்கிழமை தினத்தினை முன்னிட்டு இன்று கௌமாரியம்மன் வண்ண பட்டுடுத்தி வண்ணமலர் மாலைகள் அணிவித்து உற்சவராக சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கௌமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டு சென்றனர்.