சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய பெண் குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்;
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி பரிமளா (வயது 51). இவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், டவுன், பொன்னம்மாபேட்டை மற்றும் வாய்க்கால்பட்டறை பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் பரிமளா ரேஷன் அரிசியை வாங்கி அதனை மாவாக அரைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு பரிமளா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக 2 வழக்குகளும், கடந்த ஆண்டு 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. எனவே பரிமளாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார்.