கரூரில் ரோட்டரி கிளப் விங்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கரூரில் ரோட்டரி கிளப் விங்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2025-12-14 12:11 GMT
கரூரில் ரோட்டரி கிளப் விங்ஸ் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கரூர் ரோட்டரி கிளப் விங்ஸ் சார்பில் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து காப்பான் என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரோட்டரி கிளப் கரூர் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செயலாளர் பாண்டியராஜ், பொருளாளர் தமிழ்ச்செல்வன், பயிற்சியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவர்னர் மீனா சுப்பையா கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த முகாமில் பொது மருத்துவம் இதய பரிசோதனை, கண் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், மகளிர் மருத்துவம், காது, தொண்டை, பல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை கண்டறியும் பரிசோதனைகளும் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கினர். இந்த முகாமில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News