ஒரு மாநகராட்சியை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி இந்தியாவையே கைப்பற்றியது போல வாழ்த்து தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
ஒரே ஒரு மாநகராட்சியை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி ஏதோ இந்தியாவையே கைப்பற்றியது போல வாழ்த்து தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.;
ஒரே ஒரு மாநகராட்சியை கைப்பற்றியதற்கு பிரதமர் மோடி ஏதோ இந்தியாவையே கைப்பற்றியது போல வாழ்த்து தெரிவித்துள்ளார். கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி. கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினுடைய மாநில செயலாளர் சண்முகம் இன்று கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் கோவில் இனாம் நிலங்களில் பல வருடங்களுக்கு முன்பு குடியிருந்து வரும் பொது மக்களின் வீடுகளை கோவில் நிலம் என்று கூறி சீல் வைப்பது, ஜப்தி செய்யும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் எனவும், வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதற்கு தான் நீதிமன்றமும் அரசும் உள்ளது. ஆனால் அந்த உரிமையை பறிப்பதற்கு அரசுக்கோ நீதிமன்றத்திற்கு இல்லை எனவும், வரும் 18ஆம் தேதி இந்து அறநிலை துறை சீல் வைக்கும் முடிவை கைவிட வேண்டும்.அல்லது அரசு தடுக்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சனையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்திலோ உச்சநீதிமன்றத்திலோ மக்களின் சார்பாக முறையிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். கேரளாவில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியை தழுவி காங்கிரஸ் கட்சி அதிக இடத்தை வென்றுள்ளது குறித்தும். பிஜேபி மாநகராட்சி பிடித்துள்ளது குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சி மட்டும்தான் பிஜேபி அணி கைப்பற்றியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஏதோ இந்தியாவையே பிடித்தது போல வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். உண்மை நிலவரத்தில் இரண்டு முதல் மூன்று சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கம்யூனிஸ்ட் வெற்றி பெறும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக வெற்றி கழகம் கரூர் சம்பவத்திற்கு முன்பு, கரூர் சம்பவத்திற்கு பிறகு என்ற நிலைப்பாட்டில் தற்போது உள்ளது என்றும், கரூர் சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் கொள்கை எதிரியை பற்றி எங்கும் விமர்சிக்கவில்லை என்றும், தற்போது சிபிஐ விசாரணை கரூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வருவதால், மத்திய அரசை எதிர்க்க வேண்டாம் என முடிவு எடுத்து இதுபோன்ற ஒரு முடிவை அவர்கள் மேற்கொண்டு இருக்கலாம் எனவும், பிஜேபி அதிமுக கூட்டணியை எதிர்ப்பது எங்கள் கட்சியின் முடிவு எனவும், திமுக விற்காக நாங்கள் இந்த முடிவை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.